1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. more than thousand people died in nepal floods

நேபாள வெள்ளம்!.. ஒரே வீட்டில் 23 உடல்கள்.. 1000 பேர் பலி!..

nepal
இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பனிப்பாறைகள் உடைந்து ஒரு செயற்கை ஏரி உருவாகி. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் அந்த ஏரியும் உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி நேபாளத்தில் உள்ள ஆறுகளின் பாய்ந்ததால் வடக்கு நேபாளத்தில் உள்ள 4 ஊர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது.

அந்த ஊரிலிருந்த வீடுகள், கட்டிடங்கள், கார் மற்றும் கனரக வாகங்கள் என எல்லாமே நீரில் அடித்து செல்லப்பட்டன. பெரு வெள்ளத்தில் பல மனிதர்களும் சிக்கினார்கள். அவர்களில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம். அதேபோல், 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் மீட்கப்பட்டு சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரே வீட்டில் 23 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 4 ஆயிரம் பேரை காணவில்லை எனவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தங்கம் வாங்க வேண்டாம்!. மோடி போட்ட வீடியோவால் பங்கு சந்தையில் வீழ்ச்சி!...