1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cheif minster vijay will list of ministry soon

யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி?.. எப்போது வெளியாகும் பட்டியல்?.. பரபர அப்டேட்..

vijay
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறார். கடந்த 10ம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் சிடி நிர்மல் குமார், அருண் ராஜ், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதேநேரம் 5 நாட்கள் ஆகியும் இன்னும் யாருக்கும் எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை..

இன்னும் அமைச்சரவை பட்டியல் தயாராகாததால் 200க்கும் மேற்பட்ட அரசு கோப்புகள் முடங்கி கிடப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அரசு பணிகளும், திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், அதிமுக எம்.எல்.ஏக்களில் 24 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதில், காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளது. அதேபோல், மற்ற கட்சியினரும் எதிர்பார்ப்பார்கள். எல்லோருகும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்பதால் இழுபறி நீடித்த வருவதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி போன்றோருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது சட்டரீதியிலான பிரச்சனையை கொண்டுவரும் எனத்தெரிகிறது. ஏனெனில், தற்போதும் அவர்கள் அதிமுகவில்தான் இருக்கிறார்கள். ஆனால், அதிமுக கொறடா அவர்களின் பதவியை பறித்துவிட்டால் மேலும் சிக்கலை கொண்டுவரும்.

ஒருபக்கம், அரசு பணிகளும் திட்டங்களும் முடங்கிக் கிடப்பதால் இது விஷயமாக பேசி முடிக்கப்பட்டு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அமைச்சரவைப் பட்டியலை முதல்வர் விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே பொதுமக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது..


About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
மூனெழுத்து இட்லி நடிகைதான் எல்லாத்துக்கும் காரணம்!.. ரவி மோகன் கண்ணீர்..