பொதுமக்கள் டிஸ்டர்ப் ஆகக்கூடாது!.. காவல்துறைக்கு விஜய் போட்ட உத்தரவு!..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதோடு, மற்ற கட்சிகளிடமிருந்து ஆதரவை பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதோடு, சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் விஜய் வெற்றி பெற்றார்.
ஒருபக்கம், முதல்வரானது முதலே விஜய் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, டாஸ்மாக் கடைகளை மூடுவது என பல அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதோடு, ஒரு அரசு அதிகாரி போல காலை 9.55 மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு வரும் விஜய் மதிய உணவையும் கொண்டு வந்து அலுவலகத்திலேயே சாப்பிட்டுவிடுகிறார். மாலை 4 மணிக்கு அவர் வீட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்.
விஜயின் வீடு நீலாங்கரையில் இருக்கிறது. அங்கிருந்து கடற்கரை சாலையில் அமைந்துள்ள தலைமை செயலகம் 17 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. முதல்வர் விஜய் காலை நேரத்தில் அலுவலகத்திற்கு வருவதால் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், வாகன அணிவகுப்பு செல்லும் பாதை முழுவதும் போக்குவரத்து சீராக நடைபெறவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சிறப்பு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை செய்யுமாறும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், விஜய் முதல்வராக இருக்கும்வரை அரசு இல்லத்தில் பயன்படுத்தலாம் எனவும் பலரும் சொல்லி வருகிறார்கள்.