1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minsiter stalin reels video viral

சிறுவர்களுடன் இணைந்து ரீல்ஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின்!.., வைரல் வீடியோ!..

stalin
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசியல் பணிகளுக்கிடையே அவ்வப்போது தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். நடைபயிற்சி செய்வது.. அப்போது பொதுமக்களிடம் உரையாடுவது உள்ளிட்ட பல விஷயங்களையும் அவர் செய்து வருகிறார். இது திமுகவினரிடம் மட்டுமல்லாமல் மக்களிடமும் வரவேற்பை பெற்று வருகிறது..

இந்நிலையில்தான் டாக் வித் தேவா (Talk with deva) என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவில் கலந்து கொண்டிருக்கிறார். அண்ணன், தம்பி இரண்டு சிறுவர்கள் நடத்தும் இன்ஸ்டாகிராம் சேனல் இது. ஒன் மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள இந்த தேவா சிறுவர்கள் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்கள்.. அப்போது ஒரு ரீல்ஸ் வீடியோக்களையும் எடுத்திருக்கிறார்கள்.

‘சிஎம் சார் சொன்னா நீங்க கேப்பீங்க.. சார் உங்க அட்வைஸ் சொல்லுங்க சார்’ என்ன சிறுவர்கள் கேட்க ‘நல்லா ரீல்ஸ் போடுறீங்கட் ஹம்பி.. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. ஆனா ரீல்ஸ் போடுறதோடு நின்னுடாம நல்லா படிக்கணும்.. நீங்க ஆசைப்பட்ட மாதிரி கலெக்டர், போலீஸ் அதிகாரி ஆகணும்.. அதுக்கு என்னுடைய வாழ்த்து’  என ஸ்டாலின் அதில் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் லைக் செய்து இருக்கிறார்கள்.

இந்த சிறுவர்கள் ஏற்கனவே பிரபுதேவா, பார்த்திபன், சாய் அபயங்கர் ஆகியோரை சந்தித்து ரீல்ஸ் வீடியோக்களை போட்டு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.


About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
கோமாவில் ஈரானின் உச்ச தலைவர்?!.. துப்பு கொடுத்தால் 92 கோடி!.. டொனாட்ல் டிரம்ப் அறிவிப்பு...