வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 மார்ச் 2026 (11:18 IST)

இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!.. கேஸ், பெட்ரோல் தட்டுப்பாடு நீங்குமா?..

ship
கடந்த சில நாட்களாகவே ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கி வருகின்றன.. ஒருபக்கம் அமெரிக்க ராணுவ படைகளுக்கு இடம் கொடுத்துள்ள குவைத், சவுதி அரேபியா, அபுதாபி, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

மேலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்து சில நாட்களாகவே கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது.. தமிழகத்தில் பல சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஹோட்டல்கள் மூடும் நிலை ஏற்பட்டது.. ஒருபக்கம் பெட்ரோலும் இனிமேல் கிடைக்காது என்கிற வதந்தி உருவானதால் பலரும் தண்ணீர் கேனையெல்லாம் தூக்கிக்கொண்டு பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் வாங்கி நிரப்பி வருகிறார்கள்.. பெட்ரோல் பங்கில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில்தன், ஈரான் ஹோர்மூஸ் நீரிணையை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.. எரிபொருள் கப்பலை வழியாக இந்தியாவுக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரான் அமைச்சர் அராக்சியுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய நிலையில் இந்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டிருக்கிறது.

ஈரானின் இந்த அறிவிப்பால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் எரிவாயு தடையின்றி கிடைக்கும். ஹோமோஸ் நீரினை வழியாக இந்தியா தனது 45 சதவீத எரிபொருளை இறக்குமதி செய்கிறது.. ஈரான் அனுமதியால் சவுதி, குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு தடையின்றி எண்ணெய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஹோர்மூஸ் நீரிணையை கடக்க அமெரிக்கா இஸ்ரேல், ஐரோப்பிய கப்பலுக்கான தடை நீடிக்கிறது..

இந்தியாவுக்கு எண்ணெய் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேஸ் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடுகள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.