திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 மார்ச் 2026 (20:17 IST)

பழிக்குப்பழி!.. அமெரிக்கா எண்ணெய் கப்பலை காலி செய்த ஈரான்!..

ship
கடந்த சில நாட்களாகவே ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதனையடுத்து அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் ட்டோன் தாக்குதலை நடத்தி வருகிறது. எனவே, பல எண்னெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்து வருகிறது.

இதன் காரணமாக உலகமெங்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது.. அதனால் இந்தியாவிலும் பல மாநிலங்களிலும் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.. எனவே பொதுமக்கள் பலரும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.. மேலும் வணிக சிலிண்டர் இல்லாமல் நிறைய ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகிறது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை கிட்டத்தட்ட அழித்து விட்டோம்.. ஈரானின் ராணுவ தளங்களை அழித்து விட்டோம்.. இனிமேல் ஈரான் நாட்டிடம் ஒன்றுமில்லை.. போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றெல்லாம் பேசினார்.

இந்நிலையில் பாரசீக வளைகுடாவில் இருந்த அமெரிக்க கப்பலை ஆளில்லா படகு மூலம் ஈரன் தாக்கியது. சர்வதேச நேரப்படி நேற்று இரவு 9 மணியளவில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழந்ததை மத்திய அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் கடற்பயிற்சி முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த ஈரான் கப்பலை இலங்கை அருகே அமெரிக்கா தாக்கி தகர்த்தது. அதற்கு பழிக்கு பழியாகவே இந்த தாக்குதலை ஈரான் செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது.