1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madras High Court Refuses CBI Probe in Kallakurichi TVK MLA Case, Trusts State Police

கள்ளக்குறிச்சி விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவையில்லை.. திமுக மனுவுக்கு நீதிபதி பதில்...

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்ததாக கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது காவல்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து விரிவாக விசாரிக்க, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு சார்பில் 4 பேர் கொண்ட ‘உள் விசாரணைக் குழு’ அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரி எதிர்க்கட்சியான திமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
மனுவை விசாரித்த நீதிபதி, தவெக எம்எல்ஏ மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதில் நீதிமன்றத்திற்கு உடன்பாடு இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தமிழக காவல்துறையே மிகவும் திறமையான அமைப்பு என்றும், அதில் திறமையான அதிகாரிகள் உள்ளனர் என்றும் நீதிபதி பாராட்டு தெரிவித்தார். 
 
மேலும், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கையை பார்த்தால், தமிழகத்தில் தனி சிபிஐ கிளையையே அமைக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்டு, மாநில காவல்துறையின் விசாரணை மீது நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்தது.
 
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தூணில் தீபம் ஏற்றுவது ஆட்சியரின் பணி அல்ல.. உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர்