அன்பில் மகேஷ் கைப்பற்றப்பட்டவை என்னென்ன? அரசு தரப்பு விளக்கம்...
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புகாரின் அடிப்படையில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது இடங்கள் மற்றும் அவரது உதவியாளர்களின் இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த அதிரடி சோதனையின் போது சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 8 பென்டிரைவ்கள், 2 டெஸ்க்டாப்புகள், 1 டேப் மற்றும் 1 ஆப்பிள் ஐபேட் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வழக்கில் ஏற்கனவே B.T.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Siva

