1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Apple Set to Unveil Its First-Ever Foldable iPhone in a Historic Design Shift

ஆப்பிளின் பல ஆண்டு கனவு... முதல் Foldable ஐபோன் ரிலீஸ்.. விலை ரூ.2 லட்சமா?

ஆப்பிள் நிறுவனம்
தொழில்நுட்ப உலகில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனது முதல் Foldable ஐபோனை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முன்னாள் தலைமை அதிகாரி டிம் குக், அங்கு சாம்சங் மற்றும் ஹவாய் நிறுவனங்களின் மடிக்கக்கூடிய போன்களின் எழுச்சியை கண்டு வியந்து, ஆப்பிளும் இதுபோன்ற தயாரிப்பில் இறங்க வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தினார். 
 
இதன் தொடர்ச்சியாக, கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான பொறியியல் மற்றும் வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த ஆப்பிள் நிறுவனம், தற்போது இந்த சாதனத்தை வெற்றிகரமாக களமிறக்கியுள்ளது. இந்த புதிய போன், கடந்த 20 ஆண்டு கால ஐபோன் வரலாற்றில் மிக முக்கிய வடிவமைப்பு மாற்றமாக கருதப்படுகிறது.
 
புதிய தலைமை செயல் அதிகாரியான ஜான் டெர்னஸ் இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்துகிறார். 'V68' என்ற குறியீட்டுப் பெயருடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மடிக்கக்கூடிய ஐபோன், பிரீமியம் ரக வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2 லட்சத்திற்கும் மேல் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
7.8 அங்குல விரிந்த உள் திரை மற்றும் 5.5 அங்குல வெளித் திரை கொண்டுள்ள இந்த போன், பயனர்களுக்குச் சிறந்த திரை அனுபவத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக விலை மற்றும் சில நடைமுறைச் சவால்கள் இருந்தாலும், உலக அளவில் இது பெரும் வரவேற்பைப் பெறும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பாஜக எம்.எல்.ஏவை செருப்பால் அடிக்க வேண்டும்.. ஆவேசமாக பேசிய அமைச்சரால் பரபரப்பு..