1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva

ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக் நீக்கப்படுகிறாரா? புதிய சி.இ.ஓ யார்?

apple store
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது தற்போதைய தலைமை செயல் அதிகாரி டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் பதவியிலிருந்து விலகப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. அவருக்கு பின், நிறுவனத்தின் நீண்டகால அனுபவமிக்க அதிகாரியான ஜான் டெர்னஸ் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
 
65 வயதான டிம் குக், கடந்த 2011-ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸிடமிருந்து இந்த பொறுப்பை ஏற்றார். இவரது 13 ஆண்டுகால தலைமையில், ஆப்பிள் நிறுவனம் சுமார் 4 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை கொண்ட உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது.
 
"ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்தியது எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம்" என்று குக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் பதவி விலகிய பிறகு, அவர் ஆப்பிள் நிர்வாகக் குழுவின் தலைவராக தொடர்வார்.
 
புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ள ஜான் டெர்னஸ், 2001-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். ஐபோன், ஐபேட் மற்றும் மேக் கணினிகளின் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றிய இவர், டிம் குக் தனக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva