1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Massive Price Drop on iQOO 15 Smartphone on Amazon

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.50,000 வரை குறைந்துவிட்டதா? எப்படி வாங்குவது?

ஐக்யூ 15
அமேசான் இணையதளத்தில் கேம் பிரியர்களின் விருப்பமான ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக ரூ. 10,000 வரை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மையான விலையில் இருந்து ரூ. 9,000 நேரடி தள்ளுபடி வழங்கப்படுவதால், இதன் விலை ரூ. 76,999 ஆக குறைந்துள்ளது. 
 
மேலும், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக ரூ. 2,309 தள்ளுபடி கிடைப்பதால், இந்த அதிநவீன போனை ரூ. 75,000 விலையில் வாங்க முடியும்.
 
இதுதவிர, பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலமாக வாடிக்கையாளர்கள் ரூ. 31,800 வரை கூடுதல் தள்ளுபடியை பெறலாம். போனசின் மதிப்பு பழைய போனின் வேலை செய்யும் திறன் மற்றும் வாங்கிய ஆண்டைப் பொறுத்து மாறுபடும். 
 
இந்த போனில் 6.85 அங்குல சாம்சங் 2கே ஓஎல்இடி திரை, சக்திவாய்ந்த ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5ஜி சிப்செட் மற்றும் நீண்ட நேரம் உழைக்கும் 7,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. கேமரா பிரிவைப் பொறுத்தவரை, பின்புறம் மூன்று 50 மெகாபிக்சல் கேமராக்களும், முன்பக்கம் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளன. மேலும் தூசி மற்றும் நீர்புகாத்தன்மைக்கான ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங் வசதியும் இதில் உள்ளது.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய் - த்ரிஷா இடையிலான உறவு.. நடிகை கங்கனா ரனாவத் காட்டமான பதிவு..