நடிகை சன்னிலியோன் செய்த உதவி…

Sinoj| Last Modified செவ்வாய், 8 ஜூன் 2021 (22:47 IST)

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

சமீப நாட்களாக இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து 1 லட்சமாக உள்ளது. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதைத் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தடுப்பு மருந்துகளையும் மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு சினிமா நட்சத்திரங்களும், திரையுலக பிரபலங்களும், தொண்டுநிறுவனங்களும் உணவு, உடை கொடுத்து உதவி வருகின்றனர்.

அந்த வகையில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவருடன் இணைந்து மும்பையில் குறிப்பிட்ட மக்களுக்கு இலவச உணவு வழங்கி உதவி செய்துள்ளார். இவரது சேவைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :