அதிக விளம்பரம் போட்டு டார்ச்சர்… பி வி ஆர் சினிமாஸுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!
பிவிஆர் நிறுவனம் இந்திய அளவில் மால்களில் சினிமா திரையரங்குகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையின் முக்கியத் திரையரங்கான சத்யம் திரையரங்கை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது பி வி ஆர் நிறுவனம் சினிமா விநியோகத்திலும் இறங்க முடிவு செய்துள்ளதாம்.
இந்திய அளவில் எல்லா பெரிய நகரங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ள பி வி ஆர் நிறுவனத்தின் சினிமா பார்வையாளர்கள் தொடர்ச்சியாக வைக்கும் குற்றச்சாட்டு படத்தை குறித்த நேரத்தில் போடாமல் அதிக நேரம் விளம்பரங்கள் போட்டு இழுத்தடிக்கிறது என்பதே.
இந்நிலையில் கடந்த ஆண்டு உரிய நேரத்தில் படத்தைப் போடாமல் 25 நிமிடத்துக்கு மேல் இழுத்தடித்ததாக பிவிஆர் பெங்களூருவில் ஒருவர் நுகர்வோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நபரின் சிரமத்துக்கு 20000 ரூபாயும் அவருடைய வழக்கு செலவுக்கு 8000 ரூபாயும், அபராதமாக 1 லட்சம் ரூபாயும் கட்டவேண்டுமென பி வி ஆர் நிறுவனத்துக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.