வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 மே 2021 (10:52 IST)

புயலில் அடித்து சென்ற கப்பல்... கடலில் 60 சடலங்கள் மீட்பு!

மும்பை மிதவை கப்பல் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கரையை கடந்த நிலையில் குஜராத், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் புயல் வீசிய சமயம் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கப்பல் ஒன்று 261 ஊழியர்களோடு மும்பையில் இருந்து 70 கி.மீ தொலைவில் கடலில் உள்ள எண்ணெய் கிணற்றில் பணியில் ஈடுபட்டிருந்துள்ளது.
 
அப்போது புயலால் கடல் சீற்றம் கொண்டதால் கப்பல் இழுத்து செல்லப்பட்டது. உயரமான அலைகள் மோதியதால் சேதமடைந்த கப்பலுக்குள் கடல் நீர் புகுந்ததால் கப்பல் மூழ்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கப்பல் அங்கு சென்றபோது கப்பல் மூழ்கி கொண்டிருக்க அதிலிந்து தப்பிக்க கடலில் குதித்து மிதந்து கொண்டிருந்தவர்களை கடற்படையினர் மீட்க தொடங்கினர்.
 
அவ்வாறாக மிதவை கப்பல் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. எஞ்சிய 15 எண்ணெய் நிறுவன ஊழியர்களை தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப்படை விமானங்களும், அதிவேக படகுகளும் ஈடுபட்டுள்ளன.