புதன், 19 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2025 (07:50 IST)

சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கியது.. முரளி & வடிவேலு வேடங்களில் நடிப்பது யார் தெரியுமா?

முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் 2002 ஆம் ஆண்டு தாகா என்பவரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். அட்டகாசமான நகைச்சுவை படமாக உருவான இந்த படம் இன்றைக்கும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் முரளி மற்றும் வடிவேலு ஆகியோர் செய்யும் அட்டகாச நகைச்சுவை இன்றளவும் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே வெளியானது. கருணாகரன் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது யோகி பாபுவுக்குப் பதில் கருணாஸ் அந்த வேடத்தில் நடிக்க படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

படத்துக்கு ‘சுந்தரா டிராவல்ஸ் –சூப்பர் பாஸ்ட்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  விரைவில் படத்தின் முதல் லுக் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.