லைஃப்டைம் கலெக்ஷனில் பாகுபலியை முந்திய புஷ்பா 2… அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது. இப்போது வரை கணிசமான திரையரங்குகளில் இந்த படம் ஓடி வருகிறது. படம் இதுவரை 1900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தின் ரீ லோடட் வெர்ஷன் (சுமார் 3 மணிநேரம் 43 நிமிடம்) திரையரங்குகளில் வெளியானது.
இதன் மூலம் இந்திய சினிமாக்களில் அமீர்கானின் டங்கல் திரைப்படத்துக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது. இதையடுத்து இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகி அதிலும் கவனம் பெற்றது.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 1871 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இது பாகுபலி 2 படத்தின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி 2, 1788 கோடி ரூபாய் வசூலித்தது.