மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் செந்தில்… ஷூட்டிங் தொடக்கம்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜோடியாக 80 கள் மற்றும் 90களில் அதகளம் செய்தவர் கவுண்டமணி செந்தில் ஜோடி.அவர்களை தமிழ் சினிமாவின் லாரல் ஹார்டி ஜோடி என்று சொல்லலாம். 2000 களுக்கு பிறகு இருவருக்குமே வாய்ப்புகள் குறைந்தன.
அதன் பிறகு செந்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில படங்களில் நடித்து வருகிறார். இடையில் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை சாய் பிரபா மீனா இயக்குகிறார். இந்த படத்தில் செந்தில் கேங்ஸ்டராக நடிக்க அவரோடு கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோன், மகாநதி சங்கர், பொன்னம்பலம், ரவிமரியா, கனல் கண்ணன், சென்ராயன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.