புதன், 19 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2025 (09:31 IST)

இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ்… தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து!

2025 ஆம் ஆண்டு பிறந்து தமிழ் சினிமாவுக்கு இதுவரை பெரிய சிறப்பெதுவும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸான மத கஜ ராஜா மற்றும் ஜனவரி இறுதியில் ரிலீஸான ‘குடும்பஸ்தன்’ என்ற படங்கள் மட்டுமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு  மத்தியில் ரிலீஸான ‘விடாமுயற்சி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் சராசரியான வசூலையே பெற்றது. இந்நிலையில் வரும் வெள்ளிக் கிழமை தமிழ் சினிமாவில் 10 படங்கள் ரிலீஸாகவுள்ளன.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், டிராகன், ராமம் ராகவம், படவா, கெட் செட் பேபி, பிறந்தநாள் வாழ்த்து, ஈடாட்டம், ஆபிஸர் ஆன் டூட்டி, விஷ்ணுபிரியா, பல்லாவரம் மனை எண் 666 ஆகிய 10 படங்கள் ரிலீஸாகின்றன. இதில் டிராகன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.