வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (18:05 IST)

தோனி அவுட்; மறக்க முடியாத விக்கெட்: பாகிஸ்தான் வீரர் கமெண்ட்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலி, தோனியை குறித்தும், அவரது சிறந்த விக்கெட் எதுவென்றும் பகிர்ந்துக்கொண்டுள்ளார். 
 
பாகிஸ்தான் அணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த இந்திய அணிக்கு எதிரான ஃபைனலில் சிறப்பாக பவுலிங் செய்து 3 விக்கெட் கைப்பற்றினார் என்பது குரிப்பிடத்தக்கது. 
 
ஹசன் அலி சமீபத்தில் தனது 50 வது சர்வதேச விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் தனது வாழ்நாளில் கைப்பற்றிய சிறந்த விக்கெட் குறித்த தனது நிகழ்வை பகிர்ந்துகொண்டார்.
 
அவர் கூறியதாவது, சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் போட்டியை யாராலும் மறக்க முடியாது. தோனி களத்தில் இருந்தவரை போட்டி ஒரு வித பதட்டமாகவே இருந்தது. அவரது விக்கெட்டை கைப்பற்றியது தனி தெம்பை பாகிஸ்தான் வீரர்களுக்கு அளித்தது. அதுவே எனது சிறந்த விக்கெட்டாக கருதுகிறேன். தோனி எப்படிபட்ட வீரர் என இந்த உலகத்துக்கே தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.