சிறந்த வீரர்களுடன் கோலியை ஒப்பிடாதீர்கள்: பாகிஸ்தான் வீரர்!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் கோலியை சச்சின், டிராவிட் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஒப்பிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
முகமது யூசுப் கூறியதாவது, நான் கிரிக்கெட் விளையாடியபோது, கிரிக்கெட் அணிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். நான் விளையாடும் போது இந்திய அணியில் சச்சின், ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான்கள் விளையாடினர்.
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதுள்ள வீரர்கள், தரமான வீரர்களாக இல்லை. பலமில்லாத அணிகளுடன் மோதி ரன்களை குவிக்கின்றனர். இன்றைய கிரிக்கெட் விதிமுறைகளும் மாறிவிட்டது. கோலி நல்ல பேட்ஸ்மேன். ஆனால் அவரை சச்சின், டிராவிட் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ளார்.