சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!
வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.
இங்கிலாந்து தொடரை முடித்துள்ள இந்திய அணி வரும் 15 ஆம் தேதி துபாய்க்குப் பயணம் செய்ய உள்ளது. அங்கு இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் எதுவும் கிடையாது என சொல்லப்படுகிறது. இதனால் இந்திய அணி வலைப்பயிற்சி போன்ற பயிற்சிகளில் மட்டும் ஈடுபடும் என தெரிகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கு செல்லும் இந்திய அணியினருடன் அவர்களது குடும்பத்தினர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.