மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்
ஆண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கான பிரிமியர் லீக் போட்டிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், மூன்றாவது மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் இன்று தொடங்க இருப்பதை அடுத்து, இன்றைய முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்ச் அணி மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டி உட்பட அனைத்து போட்டிகளும் இரவு 07.30 மணிக்கு தொடங்கும் என்றும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலையில் இந்த போட்டிகளை ஒளிபரப்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சாம்பியன் கோப்பையை வென்றன.
இந்த நிலையில், மூன்றாவது சீசனில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. அந்த அணிகள் பின்வருவன:
டெல்லி கேப்பிட்டல்ஸ்
குஜராத் ஜயண்ட்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
யுபி வாரியர்ஸ்
Edited by Siva