1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (10:38 IST)

டக் அவுட் ஆகி சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்!!

பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார் 26 வயதான பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மல்.


 
 
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உமர் அக்மல் விளையாடி வருகிறார். 
 
நேற்று நடைபெற்ற போட்டியில் உமர் அக்மல் டக் அவுட் ஆனார். இதன் மூலம் உமர் அக்மல் 24-வது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதல் இடம்பிடித்துள்ளார். 
 
இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணியின் கிப்ஸ், இலங்கையின் தில்ஷன், வெஸ்ட் இண்டீசின் ஸ்மித் ஆகியோர் 23 முறை டக் அவுட் ஆகி முன்னிலையில் இருந்தனர். 
 
இந்திய அணியின் கவுதம் காம்பீர் 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார். ஹர்பஜன் சிங் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.