1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Why kohli did not appoint as captain says RCB director

விராட் கோலிக்குக் கேப்டன் பதவி தேவையில்லை.. ஆர் சி பி இயக்குனர் பதில்!

ஆர் சி பி
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு அந்த அணியின் இயக்குனர் மோ போபாட் பதிலளித்துள்ளார் . அதில் “விராட் கோலியும் ஒரு தேர்வாக இருந்தார். ஆனால் விராட் கோலிக்கு கேப்டன்சி தேவையில்லை. அவருக்குள் இயற்கையாகவே கேப்டன்சி திறன் உள்ளது. நீங்கள் கடந்த சில சீசன்களில் அதைப் பார்த்திருக்கலாம். ஆனால் இப்போது ரஜத் படிதார் மேல் நிறைய அன்புகள் கிடைப்பதை நாங்கள் பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth