ரோகித் சர்மாவை புகழ்த்து அசிங்கப்பட வைத்த பாகிஸ்தான் வீரர்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 30 ஜூலை 2017 (16:32 IST)
என்னை சாதாரண பந்துவீச்சாளர் என்று ரோகித் சர்மா சொன்னாலும் அவரை நான் சாதாரண பேட்ஸ்மேன் என்று சொல்லமாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆமிர் கூறியுள்ளார்.

 

 
பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகமது ஆமிர் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா, தவான், விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி சிறப்பாக விளையாடினார். மேலும் இந்த பங்களிப்பு பாகிஸ்தான் அணியை வெற்றிப்பெறச் செய்தது. 
 
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
 
ஆமிர் சாதாரண பந்துவீச்சாளர்தான். அவர் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டும். ஆனால் அவரை மிகைப்படுத்தி பேசிகிறார்கள் என்றார்.
 
அப்போது ஆமிர் எதுவும் பதில் கூறவில்லை. அண்மையில் ஆமிர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
 
நான் சாதாரண பந்துவீச்சாளர் என்பது ரோகித் சர்மா கருத்து. தற்போது அவர் அந்த எண்ணத்தை மாற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் என்னை சாதாரண பந்துவீச்சாளர் என்று சொன்னாலும், நான் அவரை சாதாரண பேட்ஸ்மேன் என்று சொல்லமாட்டேன். அவரது சாதனை அளப்பரியது. அவரை நான் மதிக்கிறேன் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :