தொடர்புடைய செய்திகள்
- பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்....
- லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து மாற்றப்படுகிறதா? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!
- 2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி செல்லும் நாடு இதுதான்!
- அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி… அட்டவணை வெளியிட்ட இங்கிலாந்து வாரியம்!
- இந்திய அணியின் முக்கிய வீரராக நடராஜன் வருவார் –ஆருடம் சொன்ன முன்னாள் வீரர்!
டெஸ்ட் தொடரில் விளையாடுவதை விட மகனைக் கையில் ஏந்துவதையே கோலி விரும்புகிறார் – கபில்தேவ் கருத்து!
கோலி மனைவியின் பிரசவத்துக்காக இந்தியா திரும்புவது குறித்து கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை. தனது மனைவிக்கு பிரசவம் நடக்க உள்ளதால் அவரோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா திரும்பியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கோலி டெஸ்ட் தொடரை விட தன் மகனை கையில் ஏந்துவதையே விரும்புகிறார். அதை நான் மதிக்கிறேன். ஆனால் எங்கள் காலத்தில் எல்லாம் அப்படி நினைத்த நேரத்தில் வரமுடியாது. ஆனால் இப்போது ஒரு வீரர் ஒரு விமானத்தையே வாங்கி குடும்பத்தோடு செல்ல முடியும். கவாஸ்கர் தனது மகன் பிறந்த போது அவரை பல மாதங்களுக்குப் பார்க்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
