லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து மாற்றப்படுகிறதா? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!

Last Updated: வெள்ளி, 20 நவம்பர் 2020 (19:16 IST)

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐசிசிக்கும் இடையே நிதி தொடர்பான ஒப்பந்தம் முடிவுக்கு வராததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சில மாற்றங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

உலக டெஸ்ட் அணிகளுக்கான சாம்பியன் ஷிப் போட்டி இந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு ஒரு உள்நாட்டுத் தொடரிலும் ஒரு வெளிநாட்டு தொடரிலும் விளையாடவேண்டும். இந்த தொடரின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருந்தது.
ஆனால் இப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐசிசிக்கும் இடையே நிதி தொடர்பான ஒப்பந்தங்களில் சில முடிவுக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :