செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2020 (12:09 IST)

அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி… அட்டவணை வெளியிட்ட இங்கிலாந்து வாரியம்!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு பின்பகுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

கொரோனா காரணமாக அதிகமான தொடர்கள் ரத்து செய்யப்பட்டதால் மிகப்பெரிய வருவாய் இழப்பில் உள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். அதனால் அடுத்த ஆண்டு அதிகளவில் உள்ளூரில் போட்டிகளை நடத்த உள்ளது. இதற்கான அட்டவணையை அது வெளியிட்டுள்ளது . அதில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இதே போன்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி கலந்துகொண்டு 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.