ஐபிஎல் விளையாட உங்கள் வீரர்களை அனுப்பாதீர்கள் – ஆஸ்திரேலிய வீரரின் கருத்தால் சர்ச்சை!

Last Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (10:16 IST)

ஐபிஎல் தொடரில் விளையாட வீரர்களை அனுப்பாதீர்கள் என கிரிக்கெட் வாரியங்களுக்கு ஆலன் பார்டர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆலன் பார்டர் உலக கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை ஐபிஎல் போன்ற பிரான்ச்சைஸ் தொடர்களுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். உள்ளூர்போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை சர்வதேசப் போட்டிகளுக்குக் கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ள அவர் ‘இது போன்ற தொடர்கள் பாக்கெட்டை பணத்தால் நிரப்பிக் கொள்ளவே நடத்தப்படுகின்றன. அந்த தொடர்கள் டெஸ்ட் போட்டிகளை ஒழித்துக் கட்டவே முயல்கின்றன. இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் போன்றவைதான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் உயிர்ப்போடு கொண்டுவரவேண்டும்’ எனக் கூறியுள்ளார். பார்டரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :