1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2020 (16:08 IST)

2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி செல்லும் நாடு இதுதான்!

2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி செல்லும் நாடு இதுதான்!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது என்பதும் அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வாழும் 2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செல்லும் நாடு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வரும் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறது
 
இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிகள் குறித்த அட்டவணை இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது