1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Djokovic visa cancel confirmed

ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படும் ஜோகோவிச்! – கனவாய் போன டென்னிஸ் போட்டி!

Sports
ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்ற ஜோகோவிச்சின் விசா ரத்து மீதான வழக்கு தள்ளுபடியானதால் அவர் திரும்ப அனுப்பப்படுகிறார்.

பிரபல செர்பிய டென்னிஸ் வீரரான ஜோகொவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்றார். ஆனால் அவர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவரை அனுமதிக்க முடியாது என ஆஸ்திரேலிய அரசு விசாவை ரத்து செய்தது.

இதுகுறித்து ஜோகோவிச் தரப்பு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் அரசு விசாவை ரத்து செய்தது செல்லும் என உத்தரவிட்டுள்ளது. நாளை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடங்க உள்ள நிலையில் ஜோகோவிச் விசா ரத்தானதால் அவர் போட்டியில் விளையாடாமலே திரும்ப அனுப்பப்பட உள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆஷஸ் தொடர்: 5வது போட்டியிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி!