திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (23:43 IST)

ஜோகோவிச் இல்லாவிட்டாலும் கிராண்ட்ஸ்லாம் முக்கியம்- நடால்

ஆஸ்திரேலிய நாட்டு அரசு தொடர்ந்து இரண்டாம் முறையாக டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை நிராகரித்துள்ள நிலையில், செர்பிய வீரர் ஜோகோவிச் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய கிராண்ட்ஸலாம் தொடர் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளது.

டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தொற்றுடன் தொடர்களினல் பங்க்கெற்பதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டு அரசு தொடர்ந்து இரண்டாம் முறையாக டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை நிராகரித்து, அவரை அஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து டென்னிஸ் வீரர்  நடால், ஜோகோவிச் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய கிராண்ட்ஸலாம் தொடர் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.