வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 16 ஜனவரி 2022 (00:08 IST)

தடுப்புக் காவலில் நோவாக் ஜோக்கோவிச்

டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திங்களன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச் விளையாடுவாரா, நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவாரா என்று ஞாயிறன்று நீதிமன்றம் முடிவு செய்யும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாததால் அவருடைய விசா முதலில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் மூலம் அவர் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார்.

எனினும் இரண்டாவது முறையாகவும் அவரது விசா ரத்து செய்யப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அவர் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று அதற்கு ஆஸ்திரேலிய அரசு காரணம் கூறியது.