1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

கபடி போட்டியை பார்க்க வந்த 100 பேர் காயம்: தெலுங்கானாவில் ஏற்பட்ட விபத்து!

கபடி போட்டியை பார்க்க வந்த 100 பேர் காயம்
தெலுங்கானா மாநிலத்தில் கபடி போட்டியை பார்க்க வந்த பார்வையாளர்கள் 100 பேர் திடீரென காயம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தெலுங்கானா மாநிலத்தில் சூர்யாபேட் என்ற பகுதியில் 47 வது தேசிய அளவிலான கபடி போட்டி நடந்து வருகிறது. இந்த கபடி போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த கேலரி திடீரென சரிந்து விழுந்தது. இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இடிபாடுகள் காரணமாக சுமார் 100 பேர் காயமடைந்தனர் 

பார்வையாளர்கள் அமர்ந்து இருந்த கேலரியில் அதிகபடியான நபர்கள் உட்கார்ந்தால் பாரம் தாங்காமல் கேலரி சரிந்து விழுந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருபது பேருக்கு மேற்பட்டவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இந்த மைதானத்தில் மரத்தாலான மற்றும் இரும்பு கம்பிகளால் ஆன காலரிகள் கட்டப்பட்டதாகவும் ஒவ்வொரு கலரிலும் 1,500 நபர்கள் வரை உட்காரலாம் என்றும் ஆனால் அதை விட அதிகமான பார்வையாளர்கள் உட்கார்ந்ததால் ஏற்பட்ட பாரம் காரணமாக இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது