தொடர்புடைய செய்திகள்
- தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கும் வேட்பாளர்கள்! – மநீம அதிர்ச்சி
- ”மண் அள்ளுங்க.. நான் பாத்துக்கறேன்!” – ஓவராய் பேசிய செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையம் வழக்கு
- ஐயா.. இந்த வருஷமும் பாஸ் போட்டுவிடுங்க.. சமயம் பாத்து அடிக்கிறீங்களேப்பா! – ஓபிஎஸ் பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!
- கோவில்களில் பிரசாதம், அர்ச்சனை வேண்டாம்! – அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகள்!
- தேர்தலில் இருந்து விலகிய மன்சூர் அலிகான்… ஏன் தெரியுமா?
இந்த விளையாட்டு பேராவது தெரியுமா? ஆம்ஸ்ஸு.. தூம்ஸ்ஸு..! – கபடியில் களமிறங்கிய ஜெயக்குமார்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் இளைஞர்களுடன் கபடி விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் ராயப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அமைச்சர்களிலேயே ஜாலியான அமைச்சராக அறியப்படும் ஜெயக்குமார் விழாக்களில் எம்.ஜி.ஆர் பாடலை மேடையில் பாடுவது, குத்துச்சண்டை வீரர்களோடு குஸ்தி போடுவது என குறும்பாக செய்யும் பல விசயங்கள் இதற்கு முன் வைரலாகியுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ராயப்பேட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார் அங்கு நடைபெற்ற கபடி விளையாட்டில் கலந்துக் கொண்டார். வேட்டி சட்டையோடு களத்தில் இறங்கி கபாடி பாடி அவர் விளையாடும் வீடியோ வைரலாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
