1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 25 ஜனவரி 2025 (09:36 IST)

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!

பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.

இந்நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் அவர் கிரீடத்தில் மேலும் ஒரு சிறகு சூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் முறையாக WTC இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இப்படி அடுக்கடுக்கான வெற்றிகளைப் பெற்று சிறந்த கேப்டனாக மிளிர்ந்து வருகிறார் கம்மின்ஸ். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட் கேப்டனாக ஐசிசி பேட் கம்மின்ஸை தேர்வு செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டும் இந்த விருதைப் பேட் கம்மின்ஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.