ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (17:56 IST)

சிறுவர்களுடன் கபடி விளையாடி வாக்கு சேகரித்த முன்னாள் எம்.எல்.ஏ. !

சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்எ அசோக் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். 

 
சென்னை திருவான்மியூர் மீனவ குப்பத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் அசோக் செல்லும் இடமெல்லாம் பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். 
 
திருவான்மியூர் பகுதியில் பள்ளி மாணவர்கள் கபடி விளையாடி கொண்டிருந்தனர் அப்பொழுது அந்த பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் அசோக் சிறுவர்களுடன் கபடி விளையாடினார். 
 
சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்களுடன் கபடி விளையாடியதை அனைவரும் பார்த்து ரசித்தனர்.