இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி கடந்த 22 ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாராமாக வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் அதிரடி சரவெடி சென்னையிலும் தொடர்ந்து வெற்றியைத் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்றைய போட்டியின் இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்றைய போட்டியில் டாஸ் முக்கியக் காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.