1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (13:27 IST)

கொளத்தூரில் முக ஸ்டாலினை எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய சகாயம்!

சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் அரசியலில் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்திருந்தார். மேலும் அவர் சகாயம் அரசியலமைப்பு என்ற கட்சியைத் தொடங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சகாயம் தனது அரசியலமைப்பில் இருந்து 20 வேட்பாளர்கள் போட்டியிட வைப்பதாக தெரிவித்துள்ளார்/ ஆனால் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது ’வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது அரசியல் அமைப்பில் இருந்து 20 இளைஞர்கள் போட்டியிடுகின்றனர் என்றும், தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் வளமான தமிழகம் ஆகிய கட்சியுடன் இணைந்து தனது அரசியல் அமைப்பு போட்டியிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ம க ஸ்டாலினை எதிர்த்து, மாணிக்கம் என்பவர் சகாயம் அரசியல் பேரவையிலிருந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.