1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Abishek Sharma twisted his ankle and doubt for Chennai match

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி கடந்த 22 ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாராமாக வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் அதிரடி சரவெடி சென்னையிலும் தொடர்ந்து வெற்றியைத் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்த அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்கு முழங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!