1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (11:06 IST)

காலில் காயம் பட்ட கமலுக்கு பழக்கூடை அனுப்பி வாழ்த்து கூறிய வானதி!

காலில் காயம் பட்ட கமலுக்கு பழக்கூடை அனுப்பி வாழ்த்து கூறிய வானதி!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜக பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் கோவை தெற்கு தொகுதியில் நேருக்கு நேர் மோதி வருகின்றனர் இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று பலருக்கு தெரியவில்லை 
 
இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் அதிகாலையில் நடைபயிற்சி செய்து கொண்டே தேர்தல் பிரச்சாரம் செய்தபோது சிலர் அவருடைய காலில் மிதித்து விட்டதால் அவருடைய கால் வீங்கி விட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். அவருடைய பிரச்சாரம் திட்டங்களும் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் காலில் காயமடைந்த கமல்ஹாசன் விரைவில் குணம்பெற வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசனுக்கு எதிராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் பழக்கூடையை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமன்றி அவர் விரைவில் குணமாக கடிதம் அனுப்பியிருக்கிறார்
 
தமிழகத்தை ஒரே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் அரசியல் நாகரிகத்தை கடைபிடித்து வருவது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது