ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!
பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த தொடருகான துணை கேப்டனை நியமிப்பதில் ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கம்பீர் ஹர்திக் பாண்ட்யாவை துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் அகார்கர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சுப்மன் கில்தான் வேண்டும் எனக் கூறி அவரை நியமித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஷுப்மன் கில் மேல் விமர்சனங்கள் எழுந்தன. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக அவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லை. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் அவர் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்துக்காக ரஞ்சிக் கோப்பை தொடரில் ஆடிவரும் ஷுப்மன் கில் அபாரமாக சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.