1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Lookout Notice Issued Against Saurav Das Over Passport Discrepancies, Centre Tells Delhi HC

கரப்பான்பூச்சி சௌரவ் தாஸுக்கு எதிராக லுக்-அவுட்.. நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்...

சௌரவ் தாஸ்
பாஸ்போர்ட் விவரங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக சௌரவ் தாஸுக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிரிட்டனுக்குப் பயணம் செய்ய டெல்லி விமான நிலையத்தில் தடுக்கப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா இந்த தகவலை நீதிபதி அமித் மகாஜன் முன்பு சமர்ப்பித்தார்.
 
மும்பை காவல்துறையின் கோரிக்கையின் பேரில் இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டதாகவும், சௌரவ் தாஸின் பள்ளிப்படிப்பு, முகவரி மற்றும் பெற்றோர் விவரங்களில் உள்ள முரண்பாடுகள் அவரது இந்திய குடியுரிமையிலேயே கேள்விகளை எழுப்புவதாகவும் மத்திய அரசு வாதிட்டது. சில ஆவணங்களில் டெல்லி முகவரியும், சிலவற்றில் புதுச்சேரி முகவரியும் உள்ளதாகவும், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தந்தையின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
 
எந்தவொரு முன்னறிவிப்போ அல்லது உத்தரவு நகலோ வழங்கப்படாமல் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டதாக சௌரவ் தாஸ் தரப்பு வழக்கறிஞர் அகில் சிபல் வாதிட்டார். இதையடுத்து, மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
போதையில் அசிங்கமாக திட்டினார்!. அருள் விக்னேஷ் மீது குவியும் புகார்கள்...