1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. YouTube channels booked for Coimbatore student suicide case

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: யூடியூப் சேனல்கள் மீது வழக்குப் பதிவு

YouTube
சமீபத்தில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சக மாணவிகளிடம் கூறிய அம்மாணவியை மிதுன் சக்ரவர்த்தி மிரட்டியுள்ளார். இதையடுத்து  அம்மாணவி மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அப்பள்ளியில் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து  கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் மாணவியின் அடையாளங்களை வெளியிட்ட 48 யூடியூப் சேனல்கல் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
உலகில் பணக்கார நாடு: அமெரிக்காவை முந்தி சீனா முதலிடம்