1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Woman forgery via youtube advertisements

பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு? ஆசை காட்டி மோசடி! – யூட்யூப் சேனல் மீது புகார்!

Tamilnadu
பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக மோசடி செய்த யூட்யூப் சேனல் மீது பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

கோவையை சேர்ந்த சரளாதேவி என்பவர் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி கோதை நாச்சியார் என்பவர் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் விளம்பரங்கள் செய்துள்ளார். நாப்கின், மெழுகுவர்த்தி போன்றவை செய்ய பயிற்சி அளிப்பதாகவும், எந்திரங்கள் வாங்கி தருவதாகவும் கூறி பயிற்சிக்கு முன்பணம் செலுத்த சொல்லியுள்ளார்.

அவர் குறிப்பிட்ட எண்ணுக்கு பலரும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு அந்த பெண்ணின் எண் ஸ்விட்ச் ஆப் ஆனதுடன், யூட்யூப் வீடியோக்களும் டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் மோசடி செய்த பெண் மீது யூட்யூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
சூர்யா மீதான விமர்சனத்தை தவிர்க்க வேண்டும்! – அன்புமணிக்கு கோரிக்கை!