செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (22:19 IST)

டேட்டிங் செய்த பெண்ணிடம் செலவுக்காசை திருப்பி கேட்ட வாலிபர்

டேட்டிங் சென்ற பெண்ணிடம் செலவு காசை திருப்பிக் கேட்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தனக்கு பிடித்த நபருடன் டேட்டிங் செய்து அதன் பின்னர் இரு மனங்களும் ஒத்துப் போனால் திருமணம் செய்து கொள்வது தற்போது மேலை நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் சர்வசாதாரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் டேட்டிங் செய்வதற்கென்றே சில செயலிகளும் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லண்டனைச் சேர்ந்த லாரன்ஸ் ஸில்வியா என்ற பெண்ணுடன் கடந்த 6 வருடமாக வாலிபர் ஒருவர் டேட்டிங் செய்துள்ளார்
 
அந்த சமயத்தில் அவர் லட்சக்கணக்கான ரூபாயை அந்த பெண்ணுக்காக செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இருவரும் திடீரென பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து இதுவரை அந்த பெண்ணுக்கு செய்த செலவுகள் அனைத்தையும் திருப்பி கேட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து இருவரும் மெசேஜ் மாறி மாறி பரிமாறி கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது