1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (15:37 IST)

கோவை மாணவி தற்கொலை சம்பவம்: மாணவிகள் பாதுகாப்பு குறித்து அதிரடி கூட்டம்!

ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி போன் தாரணி  கடந்த வியாழக்கிழமை (11-11-2021)  தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதையடுத்து அத ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் இருவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்ய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக வரும் 23-ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.