1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. School Education Department Issues Key Guidelines for Special TET Exam Application Upload and Corrections

ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு.. பள்ளிக்கல்வி துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்

ca exam
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட்’ தேர்வு வரும் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விண்ணப்ப பதிவேற்றம் குறித்து பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. 
 
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நடைபெற்று வரும் இந்த விண்ணப்பப் பதிவிற்கு நவம்பர் 19-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பணி சான்றிதழ் படிவத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல், முழுமையாக பூர்த்தி செய்து உரிய அலுவலர்களின் சான்றொப்பத்துடன் பதிவேற்ற வேண்டும். பழைய படிவத்தை பதிவேற்றினாலோ அல்லது விவரங்களை மாற்றினாலோ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஜூலையில் நடைபெற்ற தேர்வின்போது பெயர், இனிஷியல், பிறந்த தேதி, சாதி விவரங்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றில் ஏற்பட்ட கவனக்குறைவுப் பிழைகளால் ஹால் டிக்கெட் மற்றும் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்கள் எழுந்தன. 
 
எனவே, இம்முறை ஆவணங்களின்படி விவரங்களைச் சரியாக உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், நவம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்கலாம் என தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை! - நிஷாந்த் சிக்கியது எப்படி?...