1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac decided to keep new bridge to wine shops

இனிமேல் எல்லா டாஸ்மாக்கிலும் கூலிங் பீர்!.. மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...

beer
தமிழகத்தை பொறுத்தவரை மதுபான கடைகளை டாஸ்மாக் நிறுவனத்திற்கு அரசே நடத்தி வருகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு கனிசமான வருவாயும் கிடைக்கிறது. தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. டாஸ்மாக் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுபிரியர்களிடம் கூடுதலாக ரூ.10 வாங்கக்கூடாது என தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகம் கறாராக உத்தரவிட்டிருந்தது..

ஒருபக்கம் டாஸ்மாக் கடைகளில் பணம் கொடுத்தாலும் கூலிங் பீர் கிடைப்பதில்லை என்கிற புகார் பல வருடங்களாகவே இருக்கிறது. அதனை போக்குவதற்காகவும் கோடைகாலத்தில் குளிர்ச்சியான பீர்களுக்கு தேவை அதிகரிக்கும் என்பதாலும் தமிழக முழுவதும் உள்ள 4048 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் புதிய குளிர்சாதனப்பெட்டிகளை பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதற்கான ஒப்பந்த புள்ளிகள் விரைவில் கோரப்படவுளன. ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் பீர்களை வைப்பதற்கு குளிர்சாதனப்பெட்டிகள் இருந்தாலும் அவை பெரும்பாலானவை முறையாக செயல்படவில்லை. எனவே அவற்றை மாற்றிவிட்டு புதிய குளிர்சாதன பெட்டிகளை வைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.இது நடந்தால் பீர் பிரியர்களுக்கு எல்லா காலத்திலும் கூலிங்கான பீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நவம்பர் 20-ஆம் தேதி முதல் சொகுசு சுற்றுலா கப்பல் இயக்கம்.. 150 பயணிகள் பயணம் செய்யலாம்...