தனிஷ்க் நகைக்கடை கொள்ளை! - நிஷாந்த் சிக்கியது எப்படி?...
மதுரை தனிஷ்க் நகை கடையில் 10 கிலோவுக்கும் மேற்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையை சேர்ந்த நிஷாந்த் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு உதவிய மதுரையை சேர்ந்த யுடியூப்பர் மீனாட்சி நாச்சியார் கைது செய்யப்பட்டார். அவர் காட்டிய இடத்திலிருந்து 5 கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை அங்கு வைக்க உதவிய நிஷாந்தின் தந்தையும் கைது செய்யப்பட்டார்..
ஆனால் நிசாந்த் தலைமுறைவானதால் வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பெங்களூர், ஏற்காடு, சேலம், கோவை, மும்பை என பல இடங்களுக்கும் நிஷாந்த் தப்பி சென்றதால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில்தான் இன்று அவர் தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். செல்போன் சிக்னல் மூலம் கண்காணித்ததில் நவம்பர் 14ஆம் தேதி ஏற்காட்டிலும் மறுநாள் பெங்களூரில் நிஷாந்த் இருப்பது தெரிய வந்தது. போலீசார் முதலில் ஏற்காட்டிலும் பின்னர் கர்நாடகாவிலும் சென்றதை அறிந்த நிஷாந்த் ஆம்னி பேருந்தில் பெங்களூரிலிருந்து சேலம் செல்ல முயன்றார். நிசாந்தின் சந்தேகமான நடவடிக்கையை கவனித்த ஓட்டுனர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
தர்மபுரி அதியமான்கோட்டையில் பேருந்தை மடக்கிய போலீசாரை கண்டதும் ஜன்னல் வழியாக தப்ப முயன்ற நிசாந்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை மதுரைக்கு அழைத்துவர தனிப்படை விரைந்துள்ளது.